Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (12:22 IST)
அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் நாய் ஒன்றின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். ஜோசுவா ஹார்னர் மீது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸாட் ஜோசுவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோசுவா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தான் இந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என கூறினார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜோசுவா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிறுமியின் வீட்டிற்குள் நிழைந்த ஜோசுவா ‘லூசி’ என்ற  நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து அந்த நாயை கண்டுபிடித்து அதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜோசுவா 50 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்