அந்தமான் தீவுபகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் நிகழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9, 4.1 மற்றும் 5.3 என பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் சேத விவரங்கள் எதுவும் இல்லை என்றும் முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளில் விட்டு வெளியே இருப்பதாக கூறப்படுகிறது.