Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிக்கி சேலஞ்ச் செய்ய முயன்ற பெண் மருத்துவமனையில் கவலைக்கிடம்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (08:35 IST)
கிக்கி சேலஞ்சை செய்ய முயன்ற பெண் காரிலிருந்து தவறி விழுந்ததில் கவலைக்கிடமாக உள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் கிக்கி சேலஞ்ச் என்ற டிரெண்ட் பரவி வருகிறது. காரில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் திடீரென ஓடும் காரில் இருந்து இறங்கி நடுரோட்டில் டான்ஸ் ஆடி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச்
 
கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஒருஅர் ஆரம்பித்து வைத்த இந்த சேலஞ்ச் தற்போது உலகம் பரவியுள்ளதால் பலர் நடுரோட்டில் திடீரென ஓடும் காரில் இருந்து இறங்கி காரின் உடன் சென்று கொண்டே நடனமாடுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
இந்நிலையில் அமெரிக்காவின் லோவா நகரத்தில் வசித்து வரும் அன்னா ஓர்டன்  (18) என்ற இளம்பெண் இந்த கிக்கி சேலஞ்சை  முயற்சி செய்துள்ளார். 
 
அப்போது காரிலிருந்து கீழே இறங்க முயற்சித்த அவர்  நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
 
அன்னா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை பார்த்தாவது இனி மக்கள் இவ்வாறு கிறுக்குத்தனமாக செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments