நடுவானில் விமானத்திலிருந்து தவறி விழுந்த பெண் – மடகாஸ்கரில் பரிதாபம்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (14:21 IST)
மடகாஸ்கரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்து வருபவர் அலானா கட்லாண்ட். உயிரியல் பாடப்பிரிவில் படித்து வரும் இவர் இண்டர்ன்ஷிப்புக்காக மடகாஸ்கர் சென்றிருக்கிறார். பல இடங்களில் உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை சேகரித்த அவர் சிறிய ரக விமானமொன்றில் வந்து கொண்டிருந்திருக்கிறார்.

சவானா நிலப்பகுதியின் மேல்பரப்பில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்திலிருந்து தவறி விழுந்தார் அலானா. சுமார் 3500 அடி உயரத்திலிருந்து விழுந்த அலானா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விமானத்திலிருந்து அவர் தவறி விழுந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிக்காக சென்ற தங்கள் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி அலனாவின் பெற்றோரை துயரில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments