ஆஸ்திரேலியாவில் ரோலர் கோஸ்டரில் சென்ற சிறுமியை பறவை ஒன்று தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் மூவி வேர்ல்டு என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு உள்ள ரோலர்கோஸ்டரில் 10 வயது சிறுமி பெய்க் ஆர்மிஸ்டன் பயணித்துள்ளார். ரோலர் கோஸ்டர் கிளம்பி உச்சியை அடைந்தபோது, அந்தபக்கமாக பறந்து வந்த பறவை ஒன்று அந்த சிறுமியின் உச்சந்தலையில் தாக்கியது. இந்த வீடியோவை அந்த சிறுமியின் தாய் நிக்கோலே ஆர்மிஸ்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் “அந்த பறவை எதிர்பாராமல் தாக்கியதில் எனது மகளின் இடது தோல்பட்டையில் லேசான கீறல் ஏற்பட்டுள்ளது. அந்த பறவையின் இறகுகள் அவள் சட்டையில் ஒட்டியிருந்தன. மற்றபடி அவள் நலமாக இருக்கிறாள்” என்று கூறியுள்ளார்.