அமெரிக்கா தேசத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் கான்கிரீட் பரப்பில் இருந்த சந்துக்குள் ஒரு நாய் சிக்கிக்கொண்டது.
நீண்ட நேரம் போராடியும் அந்த நாயினால் வெளியவே வரமுடியவில்லை. ஒருகட்டத்தில் நாய் கல் வலியால் கத்தத்தொடங்கியது.
நாயின் கதறலைக்கேட்ட வீட்டு உரிமையாளர் உடனே வெளியே வந்து , நாயினை மீட்கப் போராடினார். ஆனால் தனி ஆளாக மீட்க முடியவில்லை என்று தெரிகிறது.
பின்னர், தீயணைப்புத் துறையினருக்குப் போன் செய்து, தன் வீட்டில் நாய் கான்கிரீட்டில் மாட்டிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தங்களிடம் இருந்த டிரில்லிங் மெஷின் ,கட்ட மெஷின் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நாயை வெளியே மீட்டனர். அதன்பின்னர் நாய் உற்சாக வலாட்டிக் கொண்டு ஓடியது. தீயணைப்புத்துறையினரின் இந்த துரிதமான முயற்சியை ஒருவர் வீடியோ எடுத்து அதை சமுகவலைதளத்தில் பதிவிட தற்போது அது வைரலாகிவருகிறது.