Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓயாமல் அழுத ஒரு மாத குழந்தை: தாய் செய்த கொடூர செயல்

Advertiesment
ஓயாமல் அழுத ஒரு மாத குழந்தை: தாய் செய்த கொடூர செயல்
, சனி, 27 அக்டோபர் 2018 (11:54 IST)
அமெரிக்காவில் குழந்தை ஓயாமல் அழுதுகொண்டே இருந்ததால் பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
 
இந்நிலையில் ஜென்னா வீட்டில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை இடைவிடாமல் தொடர்ச்சியாக அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜென்னா பெற்ற பிள்ளை என்றும் பாராமல் குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொலை செய்து குழந்தையின் உடலை அருகிலிருக்கும் பார்க்கில் வீசிவிட்டார்.
 
பின்னர் ஒன்றும் தெரியாதது போல போலீஸில் குழந்தையை காணவில்லை என புகார் அளித்தார். ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகித்த பொலீஸார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கொன்றதை ஜென்னா ஒப்புக்கொண்டார்.
 
இதனையடுத்து போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை கொலை செய்த கொடூர பெண்மணி ஜென்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு இந்தியா உடந்தையா? வைகோ சந்தேகம்