Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் உயரமான கட்டிடத்தில் அசால்ட்டாக ஏறிய இளைஞர்! – அதிர்ச்சியடைந்த போலீஸ்!

Advertiesment
Sky Scrapper
, செவ்வாய், 13 ஜூன் 2023 (08:40 IST)
உலகின் உயரமான தென்கொரிய கட்டிடம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உலகில் பல உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில் அவற்றில் ஏறுவதை பலர் சாகசமாக செய்து வருகின்றனர். ஸ்கை ஸ்க்ரேப்பர் எனப்படும் இவ்வாறான உயர்ந்த கட்டிடங்களில் ஏறவும், நடுவே கயிறு போட்டு நடக்கவும் முறையான அனுமதி பெறுவதுடன், நிறைய பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

ஆனால் சில சாகச விரும்பிகள் இந்த ரூல்ஸை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் சாகசம் செய்ய முயன்று சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அவ்வபோது நடக்கின்றன. உலகின் மிக உயரமான ஸ்கை ஸ்க்ரேப்பர் கட்டிடங்களில் 5வது இடத்தில் உள்ள கட்டிடம் 123 அடுக்குகளை கொண்ட தென்கொரியாவின் லொட்டே வோர்ல்ட் டவர்.

சமீபத்தில் தென்கொரியா சென்ற பிரிட்டிஷ் நபர் ஒருவர் திடீரென இந்த கட்டிடத்தின் சுவர்களில் வேகமாக ஏறத் தொடங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர். காவல்துறையினர் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தாமல் ஏற தொடங்கியுள்ளார். பாதுகாப்பிற்கு கயிறு உள்ளிட்ட எந்த சாதனமும் இல்லாமல் வெறும் கைகளால் அவர் தொடர்ந்து கட்டிடத்தில் ஏறியது பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

வேகவேகமாக ஏறி 73வது தளத்தில் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பிரிட்டனை சேர்ந்த 23 வயதான ஜார்ஜ் கிங் தாம்சன் என தெரியவந்துள்ளது. வெறும் கைகளால் சிலந்தி மனிதன் போல கட்டிடத்தில் ஏறி தாம்சன் அதிர்ச்சியை ஏற்படுத்துவது இது முதல்முறை இல்லையாம். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு லண்டனில் உள்ள ஷார்ட் கட்டிடத்தில் இப்படி வெறும் கைகளால் ஏறி கைதானவர்தான் தாம்சன் என தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை உண்மை மட்டுமே பேசுவார்.. ஜெயலலிதா ஊழல்வாதி என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..!