அமெரிக்காவில் கடல்பகுதியில் சுற்றுலா சென்ற படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பசிபிக் கடலில் சாண்டக்ரூஸ் தீவு உள்ளது. இந்த பகுதியில் ஆழ்கடலுக்கு சென்று கடல் உயிரினங்கள், பவளப்பாறைகளை காணும் ஸ்கூபா டைவிங் மிக பிரபலமானது. இதற்காக சாண்டக்ரூஸ் நோக்கி 33 பயணிகளோடு சென்ற படகு ஒன்று நடுக்கடலில் திடீரெனெ தீப்பிடித்தது.
உடனடியாக அங்கே விரைந்த கடலோர காவல்படையினர் மீட்பு பணிகளில் இறங்கினர். ஆனால் இறந்த நிலையில் 4 பேரை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. மீத பயணிகள் நெருப்பை பார்த்து கடலில் குதித்து மூழ்கியோ அல்லது படகினுள் சிக்கியோ இறந்திருக்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புப்பணியினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்த திடீர் விபத்து சம்பவம் அந்த பகுதி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படகில் எவ்வாறு திடீரென தீப்பிடித்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.