சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அடுத்து எட்டு வயது சிறுவன் கனடா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த கடிதத்திற்கு பிரதமர் ஜஸ்டின் பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
டேவிட் கெல்லர்மேன் என்ற வழக்கறிஞர் தனது 8 வயது மகனிடம் யாருக்காவது கடிதம் எழுது என்று கூற அதற்கு அவரது மகன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தேர்வு செய்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமரின் மனைவியின் உடல் நலனைக் குறித்து அக்கறை விசாரித்த சிறுவனின் கடிதத்தை பார்த்து பிரதமர் ஜஸ்டின் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
உங்களது மனைவி நலமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன் என்றும், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும், அது உங்களிடமும் வருவதை நான் விரும்பவில்லை என்றும் அந்த சிறுவன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் கனடாவில் உள்ள அனைத்து மக்களையும் தாக்கும் சாத்தியங்கள் உள்ளனவா? கொரோனா வைரஸில் இருந்து விலகி இருப்பதை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து கூறுங்கள்’ என்றும் அந்த சிறுவன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது