கொரோனா எதிரொலியால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது மட்டுமின்றி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் தியேட்டர்கள், மால்கள் உள்பட அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டதால் அதில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி உள்ளனர். கொரோனா பீதியால் வருமானமே இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் வருமானம் இன்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு இந்த 15,000 ரூபாய் ஒரு ஆறுதலாக இருக்கும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்த மனுவின் விசாரணையில் அனைத்து அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே கொரோனாவால் அவதிப்படும் மக்களுக்கு நிதிஉதவி செய்ய வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது டுவிட்டரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது