Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவு!

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவு!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:38 IST)
ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் சீனா வெற்றியடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.14 ஆண்டுகள் நீடித்த இந்த யுத்தம் உலகளாவிய பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு முக்கிய மைல் கல் என்றே கூறப்படுகிறது. இதில் 35 மில்லியனுக்கும் அதிகமான சீனர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்,

ஆனால் உலகின் பிற பகுதிகளிலிருந்து சீனா மரியாதை பெற்றது. செப்டம்பர் -3 பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் வீர தியாகங்களை நினைவுகூரும் நாளாகும். இதையொட்டி சீன அதிபர் ஷிச்சின்பிங் தலைமையிலான சீனத் தலைவர்கள் பெய்ஜிங்கில் ஒரு நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது உலக ஃபாஸிச எதிர்ப்புப் போர் இறுதியாக வெற்றி பெற்றது. ஆசியாவிலுள்ள முக்கிய போர்க்களமான சீனாவும், ஐரோப்பாவிலுள்ள முக்கிய போர்க்களமான ரஷியாவும் இவ்வெற்றிக்கு மாபெரும் தியாகம் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை அளித்தன. கூட்டாகப் போராடிய இருநாட்டு மக்கள் போரில் உருவாக்கிய நட்புறவு, இருநாட்டுறவின் உயர்நிலை வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படையிட்டது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். ஜப்பானிய ஆக்கிரமிப்க்கு எதிரான இந்த போரில், பல கோடி சீன படை வீரர்களும் மக்களும் உயிரிழந்தனர் சீன வீரர்களின் தியாகம்தான் நாட்டை யுத்தத்தில் வெற்றிபெறச் செய்தது.

இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை நினைவுகூரும் வகையில் எந்த விழாக்கள் நடத்தப்பட்டாலும், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த போர் வீரர்களின் தியாகத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்ற அரசியல் மரபு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட ஐக்கிய முன்னணியில் இருந்து வருகிறது. இந்த ஐக்கிய முன்னணிதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும், அனைத்து இனங்களையும், நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்களை அணிதிரட்டியது. இறுதியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நிலவிய மக்கள் யுத்தத்தின் அடித்தளமாக ஐக்கிய முன்னணி இருந்தது. 1937 முதல் 1941ஆம் ஆண்டு வரை, சீனா சரணடைந்திருந்தால், உலக பாசிச எதிர்ப்பு போரின் போக்கு மாறியிருக்கும். ஜப்பானிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிய நாடுகளையும், ஜப்பானையும் பொறுத்தவரை, அந்த யுத்தத்தின் நினைவு எப்போதும் அமைதியாக வாழ்வது நாடுகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும், தற்போதைக்கு தீர்க்க முடியாத வேறுபாடுகள் அல்லது சர்ச்சைகள் நீக்கப்பட வேண்டும் என்பதில் சீனா எப்போதும் உறுதியாக உள்ளது.

இன்றும் அதே போல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தைப் பொருத்தவரை, இந்த அரசியல் மரபு இன்னும் முக்கியமானதாக இருக்கிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், சீனாவும் மக்கள் யுத்தத்தைத் துவக்கியது, அனைத்து குடியிருப்பாளர்களையும் வீட்டிலேயே தங்கி, முகமூடிகளை அணிந்துகொண்டு, கிடைக்கக்கூடிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதன் மூலம் தங்கள் பணியைச் செய்ய அணிதிரட்டியது. அனைத்து சீன மக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தான் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் நாட்டிற்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளன என்று சீனா பெருமை கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன் காலில் கருணாநிதி - சுதீஷ் போஸ்ட்டால் திமுக எம்பி காட்டம்!