Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைநீக்க பட்டியலில் இணைந்த வால்ட் டிஸ்னி.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 7000 ஊழியர்கள்

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:13 IST)
வேலைநீக்க பட்டியலில் இணைந்த வால்ட் டிஸ்னி.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 7000 ஊழியர்கள்
 உலகின் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது வால்ட் டிஸ்னி நிறுவனமும் இணைந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கூகுள் மைக்ரோசாப்ட் பேஸ்புக் டுவிட்டர் போயிங் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வால்ட் டிஸ்னி நிறுவனம் உலகம் முழுவதும் 7000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது 22,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை அடுத்து தற்போது மீண்டும் ஒரு மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கின்படி 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 ஆண்டுகளுக்கு பின் வருகிறது ஆட்டோ உயர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி..!

திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்: தவாக தலைவர் வேல்முருகன்

ரஷ்ய தளபதியை நாங்கதான் கொன்றோம்.. ஒத்துக் கொண்ட உக்ரைன்! - பதிலடிக்கு தயாராகும் ரஷ்யா?

நேற்று ஒருநாள் உயர்ந்த தங்கம் இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments