Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

41.57 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

41.57 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
, புதன், 16 பிப்ரவரி 2022 (07:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 41.57  கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 415,774,855 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,855,633 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 338,586,039 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 71,333,183 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79,625,776 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 949,175 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 50,553,178 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,664,958 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 639,822 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 24,252,534 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,721,845 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 509,903 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 41,833,009 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் கைது