சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள் தானாக சென்று கொரோனாவை வரவழைத்துக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகளையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முதலாக சீனாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும், சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கவும் சீனா யோசித்து வருகிறது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு எவ்வளவோ கேட்டும் சீனாவில் உள்ள கொரோனா பாதிப்புகள் மற்றும் மேலதிக விவரங்களை அளிக்காமல் இருந்து வருகிறது சீனா. இதனிடையே சீன இளைஞர்கள் செய்யும் செயல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஒருமுறை வந்து மீண்டுவிட்டால் மீண்டும் கொரோனா வராது என நம்பும் அவர்கள் தேடி சென்று கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அதீத முடநம்பிக்கையால் பல இளைஞர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதுடன் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை தொடர்ந்து வெளியிடாமல் இருந்து வருகிறது.