Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தின் தென்பகுதியில் வெள்ளம் – 32 பேர் பலி !

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:21 IST)
தாய்லாந்தின் தென் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழைப் பெய்து வருகிறது. அதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 32 பேர் வரைப் பலியாகியுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியியிட்டுள்ளன.

மேலும்  சாலைகள், பாலங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் 20,000 பேருக்கு மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடுமையான வெள்ளத்தால் மின்வெட்டு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் மிக வேகமாக நடைபெறுவதாக அந்நாட்டு அரசு அறிவிக்க முகாம்களில் உள்ள மக்களுக்கு ஒழுங்காக உணவு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments