Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலுக்கடியில் 2200 ஆண்டுகள் பழமையான நகரம்: ஆச்சரியமூட்டும் செய்தி

Advertiesment
கடலுக்கடியில் 2200 ஆண்டுகள் பழமையான நகரம்: ஆச்சரியமூட்டும் செய்தி
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:14 IST)
எகிப்து நாட்டின் கடலுக்கடியில் 2200 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக வரலாற்றில் சுனாமி மற்றும் பூகம்பத்தால் பல நகரங்கள் கடலுக்குள் புதைந்துப் போயுள்ளன. அப்படிப்பட்ட நகரங்கள் பலவற்றை உலகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில் எகிப்து நாட்டின் கடல் பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரத்தை “Lost city of Atlantis in Egypt"  என்று அழைக்கின்றனர். ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக கடலுக்குள் சென்ற ஆராய்ச்சியளர்கள், கோயில் ஒன்றையும், பழைய கப்பல் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர். இந்த கப்பல் கிபி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
webdunia

மேலும் அந்த கோயிலில் உள்ள சிலைகளும், அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் 2200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கப்பல், கிபி 3 ஆம் நூற்றாண்டில் பயணம் செய்த கப்பல் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

கோவில்களின் நகரம் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு செல்வ செழிப்போடு இருந்திருக்ககூடும் எனவும், பின்னர் பூகம்பம் அல்லது சுனாமி போன்ற இயற்கை சீற்றத்திற்கு உள்ளாகி கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்கள் அனுமதியளித்தால் தற்கொலை செய்து கொள்ளலாம்: ஒப்புதல் அளித்த மாகாண அரசு