காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (22:33 IST)
காங்கோ நாட்டிலுள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்குப் பகுதியிலுள்ல ஒரு நாடு காங்கோ. இங்கு, அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, பல வருடங்களாக உள் நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த நாட்ட்டில், பல பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவர்களை அழிக்கும் நடவடிக்கையில் காங்கோ ராணுவத்துடன் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கோவிலுள்ள கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குலில் ஈடுபட்டனர்.

இதில், அருகிலுள்ள மாகாணத்திற்குள் புகுந்த அவர்கள் பொதுமக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு காங்கோ படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலை அடுத்து, கிராமப்புற பகுதிகளில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments