நாள் தோறும் உலகில் பல லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். அதேபோல் பல லட்சம் பேர் எதாவதொரு காரணத்தினால் உயிரிழக்கிறார்கள்.
இந்த நிலையில், உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன்படி, ஐக்கிய நாடுகள் சபை புதிய மக்கள் தொகை பற்றிய ஒரு மதிப்பீடு 800 என்ற தகவலை கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அறிவித்தது.
இந்த நிலையில், இன்னும் இரு தினங்களில் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டவுள்ளது.
இதில்,அதிக மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடமும், இந்தியா 2 ஆம் இடமும், இதையடுத்து, பாகிஸ்தான், காங்கோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் உலக மக்கள் தொகை 700 கோடியில் இருந்து 800 கோடியாக அதிகரித்துள்ளது.