Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2012 போல் 2018ஆம் ஆண்டில் உலகம் அழியும்; புது ஆய்வு தகவல்

2012 போல் 2018ஆம் ஆண்டில் உலகம் அழியும்; புது ஆய்வு தகவல்
, செவ்வாய், 21 நவம்பர் 2017 (16:48 IST)
2018ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


 
புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் நிலநடுக்கங்கள் குறித்து 1900ஆம் ஆண்டு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ராபர்ட் பில்ஹம் மற்றும் ரெபிக்க பென்டிக் ஆகியோர் நடத்திய ஆராய்ச்சியின் அறிக்கைகள் ஜியோபிக்சல் இதழில் வெளியிடப்பட்டது. அதில்,
 
ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் வக்கமாக ஆண்டுக்கு 15 முதல் 20 முறை நிகழும். ஆனால் புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் 2018ஆம் ஆண்டு 25 முதல் 30 முறை நிலநடுக்கங்கள் ஏற்படும். 
 
ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை புவியின் சுழற்சி வேகம் குறைந்து 5வது ஆண்டில் அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும். இந்த 2018ஆம் முதல் துடங்கும். புவியின் சுழற்சி 4 ஆண்டுகளுக்கு முன்பே குறைய துடங்கிவிட்டது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது 2012 திரைப்படத்தில் உலகம் அழிவது போன்ற காட்சிகள் ஏற்படும். அதில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்கள் போன்ற பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைத்ரேயன் மனதில் நில நடுக்கம் - மீண்டும் நாஞ்சில் சம்பத்