Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு

Advertiesment
2018
2018ஆம் ஆண்டின் விடுமுறை தினங்கள் குறித்த அறிக்கை ஒன்றை தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதன்படி விடுமுறை நாட்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்
02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்
04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்
08 புனித வெள்ளி - 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 - ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.18- சனி
11. மே தினம் - 01.05.18 - செவ்வாய்
12. ரம்ஜான் - 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் - 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி - 13.09.18 - வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி - 02.10.18 - செவ்வாய்
19. ஆயுத பூஜை - 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி - 19.10.18- வெள்ளி
21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்
 
2018ஆம் ஆண்டின் விடுமுறை தினங்களில் 4 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. மேலும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 திங்கட்கிழமை வருவதால், இந்தாண்டு டிசம்பர் 30, 31 ஆம் தேதியுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
 
அதேபோல் அடுத்த ஆண்டு பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது,. ஆனாலும் முந்தைய சனிக்கிழமை ஜன.13-ம் தேதியுடன் சேர்த்து, 4 நாட்கள் விடுமுறையாக வருகிறது. மேலும்  மார்ச் 29, 30, 31, ஏப் 1 ஆகிய 4 நாட்கள், ஜூன் மாதம் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள், செப் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள், அக், 18, 19, 20, 21 ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமரை தேசிய மலரே இல்லை; அதிர்ச்சியளித்த ஆர்டிஐ தகவல்