கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பல நாடுகள் இன்னும் விடுபடவில்லை என்பதும் அது மட்டுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவஹை அடுத்து டெல்மிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றிலும் அமெரிக்காவிலும் இந்த டெல்மிக்ரான் வைரஸ் பரவி உள்ளதாகவும் டெல்டா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டு வைரஸ்களின் கலவை தான் இந்த டெல்மிக்ரான் வைரஸ் என்றும் கூறப்படுகிறது
இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து புதுப்புது வைரஸ்கள் பரவி வருவது மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது