Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது மீண்டும் செக்ஸ் புகார்

Advertiesment
சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது மீண்டும் செக்ஸ் புகார்
, புதன், 26 செப்டம்பர் 2018 (10:07 IST)
அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக டிரம்பால் நியமிக்கப்பட்டவர் மீது இரண்டு பெண்கள் செக்ஸ் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்த அந்தோணி கென்னடி ஓய்வுபெற்ற நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிபர் டிரம்ப் பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக நியமித்தார். இவரின் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் டிரம்ப் தேர்தலில் போட்டியிடும் போது அவர் மீது செக்ஸ் புகார் எழுந்தது போலவே, பிரெட் மீது ஏற்கனவே ஒரு பெண் செக்ஸ் புகார் அளித்திருந்த நிலையில் , தற்பொழுது மற்றொரு பெண் செக்ஸ் புகார் அளித்துள்ளார்.
 
இதனால் பிரெட்டின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், செக்ஸ் புகார் குறித்து விசாரிக்கவும் ஜனநாயகக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
webdunia
இதற்கிடையே டிரம்ப், நீதிபதி பிரெட்டை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். தன் மீது போடப்பட்ட செக்ஸ் புகார் போலவே பிரெட் மீதும் அபாண்டமாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் நான் பொருட்படுத்தப்போவதில்லை என டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள  பிரெட் கவனாக், நான் எந்த பெண்ணுடனும் தவறாக நடந்துகொள்ளவில்லை என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய காமெடி நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறை