Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்டீனா உங்களுக்கு யாரு சார் ரைட்ஸ் கொடுத்தா.. அன்னிக்கு அப்பிடி பேச ...?

Advertiesment
அப்டீனா உங்களுக்கு யாரு சார் ரைட்ஸ் கொடுத்தா.. அன்னிக்கு அப்பிடி பேச ...?
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:28 IST)
எச்.ராஜா தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.அதில் நீதிபதி செல்வம் தலைமையிலான பென்ஞ்சுக்கு  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுயமாக தொடர அதிகாரம் எதுவும் இல்லை  என கூறியிருக்கிறார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ,புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதித்த காவல் துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் நாகரிகமற்ற முறையில்  பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா விமர்சித்திருந்தார் .
 
எச். ராஜாவின் இந்த அநாகரிகமான இந்த பேச்சு  பொது மக்களிடயே பா.ஜ.வுக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாகக்கூடிய சூழலையும் ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் எச்.ராஜாவின் அநாகரிகமான  விமர்சனம் குறித்து தாமாகவே முன் வந்து விசாரித்த நீதிபதிகள் , நிர்மல்குமார் ,சி.டி.செல்வம்ஆகியோர் உள்ளடங்கிய அமர்வு, வருகிற மாதம் அக்டோபர் 22ம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எச்.ராஜாவை நேரில் ஆஜராகுமாறு கூறியிருந்தது.
 
இந்த நிலையில்  தலைமை நீதிபதி தஹில்ரமணி, நீதிபதி துரைசாமி உள்ளடக்கிய முதன்மை பென்ச் முன்பு இன்று எச்.ராஜா சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞரான கே.எஸ்.தினகரன், நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையிலான அமர்வுக்கு தனாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிகார வரம்பு இல்லை.

உச்ச நீதிமன்றம் மற்றும்  உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் படிதான்  தலைமை நீதிபதி தாமாகவே முன்வந்து இது போன்று வழக்கு தொடர முடியும். ஆகையினால் சி.டி.செல்வம் அமர்வு இந்த வழக்கினை மேலும்  தொடர முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த   தலைமை நீதிபதி அவருக்கு கூறியுள்ளதாவது: இதுகுறித்த தகுந்த உத்தரவு பதிவுகள் தந்தால் , அதைப்பற்றி நான் முடிவெடுக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச் ராஜாவைக் கைது செய்ய அவரிடமே அனுமதியா?- ராமதாஸ் கிண்டல்