Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…17 பேர் பலி

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (22:13 IST)
மெக்ஸிகோ நாட்டில் உள்ள பியூப்லா என்ற மாகாணத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில், 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர், அவர்களின் சொந்த நாடுகளை விட்டு,  மெக்சிகோ வந்து, அங்கிருந்து அருகிலுள்ள அமெரிக்க நாட்டிற்கு அனுமதியின்றி சென்று வருகின்றனர்.

இந்த  நிலையில், மெக்சிகோவின் தென் பகுதியில் இருக்கும் ஓக்ஸாகா என்ற பகுதியில் இருந்து இன்று வெனிசுலா, கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 அகதிகள் ஒரு பேருந்தில் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றனர். இப்பேருந்து பியூப்லா மாகாணத்தில் செல்லும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில்,15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் மிதந்த 15 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், சிகிச்சைப்பலனின்றி 2 பேர் இறந்துள்ளனர், அதனால், 13 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments