Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023- ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பேர் பரிந்துரை

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (21:58 IST)
ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான     நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு  நோபல் பரிசுக்கான பரிந்துரை செய்யலாம் என நோபல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆல்பிரட்   நோபல் பெயரில் ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

கலை, இலக்கியம், அறிவியல், அமைதி, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஆண்டு தோறும், நோபல் பரிசுடன் மிகப்பெரிய தொகையும் பரிசளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டின் அமைதிக்கான  நோபல் பரிசுக்கு மொத்தம் 305 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் தகுதியுடையவர்களை பரிந்துரை செய்யலாம் என நோபல் அமைப்பு  நேற்று தெரிவித்துள்ளது.

ஆனால், இப்பரிந்துரை செய்யபப்ட்டவர்களின் பெயர் 50 ஆண்டுகளாகவே ரகசியமாக வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 2022- ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !
இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் ரேசெப் தாயிப், காலை நிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் பெயர்கள் இதில் பரிந்துரை செய்யப்படிருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 376 பேர் அமைதிக்கான நோபலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments