Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹமாஸ் குழுவினர் 166 பேர் பலி!

Advertiesment
israel -Palestine
, சனி, 7 அக்டோபர் 2023 (19:32 IST)
இஸ்ரேல் நாட்டின் மீது 7 ஆயிரம் ராக்கெட்டுகளை  ஏவி  பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் குழு இஸ்ரேல் குழு  தொடர் தாக்குதலை இன்று காலை முதல் நடத்தி வருகிறது.

ஆபரேசன் அல் அக்சா ஸ்டோர்ம்ன் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது முதல் 20  நிமிடத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

இதையடுத்து மேலும்,  2 ஆயிரம் ராக்கெட்டுகள் ஏவியது. இதில் ஒரு இஸ்ரேலிய பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதல் 160 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும்,  1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய  ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

WorldCup-2023 : இலங்கை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சவுத் ஆப்ரிக்கா