கொரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்திய முதல் 15 நாடுகளின் விவரம் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. எனினும் வயதானவர்கள், நடுத்தர வயதினருக்கு மட்டுமே இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்திய முதல் 15 நாடுகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இஸ்ரேல், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், மங்கோலியா, பஹ்ரைன், அமெரிக்கா, சிலி, ஹங்கேரி, கனடா, கத்தார், உருகுவே, பின்லாந்து, ஜெர்மனி, செர்பியா, இஸ்டோனியா ஆகிய நாடுகள் முதல் 15 இடத்தில் உள்ளன.
இந்தியாவில் இதுவரை 9% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 8.3% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.