தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து திமுக செய்தி தொடர்பாளர் வைத்தியலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால முயற்சியின் பலனாக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது திமுக. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வன்முறையில் ஈடுபடும் திமுகவினர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெப்துனியா தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த திமுக செய்தி தொடர்பாளர் வைத்திலிங்கம் “அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் இழிவான ஒன்று. அதுகுறித்து தெரிய வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியை விட்டு நீக்கியதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. இதில் திமுகவில் அடிமட்ட தொண்டர் மேல்மட்ட பிரமுகர் என்ற பாகுபாடில்லாமல் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீது கழகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என கூறியுள்ளார்..
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்காதது, மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எப்படி சாத்தியம்? போன்ற கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.. கேள்விகளையும், விரிவான பதில்களையும் கீழே உள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்..