அஸ்திரேலியாவில் உள்ள ஹேமலின் கடற்கரையில் திமிங்கலங்கள் பல கரை ஒதுங்கியுள்ளன. இதில் 135 திமிங்கலங்கள் இறந்துவிட்டன. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அஸ்திரேலியாவின் கடற்கரையில் நூற்றுக்கணக்கான பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருந்ததை மீனவர்கள் கண்டுள்ளனர். இதன் பின்னர் உடனடியாக வன விலங்கு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் திமிங்கலங்களை கடலுக்கு கொண்டு விடும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால், கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 15 திமிங்கலங்கல் மட்டுமே கடலுக்கு விடப்பட்டது.
மீதம் இருந்த 135 திமிங்கலங்கள் கரையில் உயிரிழந்தன. இது கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, ஹேப் எனப்படும் கிருமித்தொற்றால் திமிங்கலங்கள் பாதிக்கப்பட்டு கரை ஒதுன்ஹ்கி இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.