Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (11:15 IST)
தாய்லாந்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் குகைக்குள் சிக்கியிருந்த நிலையில் அவர்கள் 9 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சிக்காக லுவாங் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது பெய்த கனமழையின் காரணமாக அவர்கள் மலையின் குகைக்குள் ஒதுங்கியுள்ளனர்.
 
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பாததால், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக அவர்கள் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. 
 
இதனால் அவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் களமிறங்கியது. வெளிநாடுகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 1000 வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குகையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பகுதியில் துளையிடப்பட்டு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.
வீரர்களின் 9 வது நாள் தேடுதலில் கால்பந்து குழுவினர் சிக்கியிருக்கும் பகுதியை, நேற்று 2 வீரர்கள் கண்டறிந்தனர். அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிரோடு இருப்பதைக் கண்ட வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை அவர்கள் வீடியோவாக எடுத்துக் கொண்டனர்.
 
அவர்களை மீட்க பல வீரர்கள் தேவைப்பட்டதால், அந்த 2 வீரர்களும் முதலில் நாங்கள் இப்போது இங்கிருந்து செல்கிறோம். அதன்பின்னர் நாளை மேலும் பல வீரர்களுடன் வந்து உங்களை அழைத்துச் செல்கிறோம் என அவர்களிடம் கூறி அங்கிருந்து வெளியேறினர்.
 
எனவே அந்த 13 பேரும் இன்று மீட்கப்படுவார்கள். இதனால் அந்த 13 பேரின் குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments