Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்

Advertiesment
13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்
, வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:12 IST)
சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறதி. அதில் 13 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
சிங்கப்பூர் அல்ஜுனைத் கிரசென்ட் பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் 41 பேரை ஜிகா வைரஸ் தாக்கியுள்ளது.
 
அவர்களில் 34 குணமடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், சிங்கப்பூரில் 13 இந்தியர்கள் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மத்திய அரசுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக கூறினார்.
 
சிங்கப்பூர் முழுவதும் 115 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுஷ்மா சுவராஜ் தனது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
 
இந்தியர்களின் பாதுகாப்பு நலன் கருதி பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய சிலம்பம் போட்டியில் பரணிபார்க் கல்வி குழும மாணவர்கள் முதலிடம்