Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய சிலம்பம் போட்டியில் பரணிபார்க் கல்வி குழும மாணவர்கள் முதலிடம்

Advertiesment
தேசிய சிலம்பம் போட்டியில் பரணிபார்க் கல்வி குழும மாணவர்கள் முதலிடம்
, வியாழன், 1 செப்டம்பர் 2016 (15:56 IST)
இந்திய ஊரக விளையாட்டு சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த ஆகஸ்டு - 26, 27, 28 ஆகிய தேதிகளில் கடலூரில் நடைபெற்றது.



இதில் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் V.சிவக்குமார் , I.தரணிதரன் , R.மோகன பிரசாந்த், பரணி வித்யாலயா பள்ளி மாணவர் K.மெளனீஷ் ஆகியோர் முதலிடம்  பெற்று தங்கம் பதக்கம் வென்றனர். மாணவர் I.பிரசன்னா  இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணிபார்க் கல்விக் குழுமத்தின் செயலாளர் திருமதி.பத்மாவதிமோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.

பரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் திருமதி.S.சுதாதேவி, பரணிபார்க் பள்ளி முதல்வர் K.சேகர், துணை முதல்வர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

புகைப்படம்:  தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள், பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன், பரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையில் அடித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே : சுப.உதயகுமாரன் கோபம்