Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவிடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை- இலங்கை அரசு

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (16:57 IST)
இலங்கை நாட்டில், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இலங்கை அரசு சட்டம்  நிறைவேற்றியுள்ளது.

நமது அண்டை நாடான இலங்கையில்,  கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தினர்.

இதனால் அப்போதைய அதிபர் ராஜபக்சேவை பதவி விலகச் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தியது.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக  கருதப்படும் சமூக ஊடகங்களில் பதிவிடும் தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத்தை அந்த நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின்படி யாராவது சட்டவ்விரோதமாகக் கருதப்படும் பதிவுகளை பகிர்ந்தால்  அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதே சமயம், சட்டவிரோதமாக கருத்துகள் பதிவிடுவோரின் தகவல்களை, பயனர் விவரங்களை வெளியிடத் தவறினாலும், சமூக ஊடக நிர்வாகிகளுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கையில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments