Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி பேருந்து மீது ரயில் மோதியதில் 4 பேர் பலி

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (10:24 IST)
பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.
தெற்கு பிரான்ஸின் மிலாஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளி ஒன்றில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளி பேருந்துகளில் வந்து செல்வது தான் வழக்கம். இந்நிலையில்  பள்ளி பேருந்து வழக்கம் போல் நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பள்ளி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து, சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
 
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments