ஜப்பானில் உள்ள ஒரு அதிவேக புல்லட் ரயிலில் ஏற்பட்ட விரிசல், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த 1000 க்கும் மேற்பட்டோர் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.
தெற்கு ஜப்பான் ரயில் நிலையத்தில் இருந்து புல்லட் ரயில் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில மணித் துழிகளிலே ரயிலில் இருந்து கருகிய வாடையும், ஒரு விதமான இரைச்சல் சத்தமும் கேட்டது. இதனால் அவசரஅவசரமாக புல்லட் ரயில் மத்திய ஜப்பானில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் ரயிலின் ஒரு பெட்டியினுடைய
அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மணிக்கு 400 கிலோமீட்டர்(400 kmph) வரை செல்லும் இந்த புல்லட் ரயில், இதே விரிசலோடு சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் ரயிலில் உள்ள குறை கண்டுபிடிக்கப்பட்டதால், ரயிலில் பயணித்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.