சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து அத்தனை படங்களையும் வெற்றிப்படங்களாக பெயரெடுத்து உலகம் முழுக்க பேமஸ் ஆன தயாரிப்பு நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். கோஸ்ட் ரைடர், ஸ்பைடர்மேன் 3, பென்டாஸ்டிக் 4 ரைஸ் ஆப் தே சில்வர் சர்ப்பர், ‘அயன் மேன், தே இன்க்ரிடியபிள் ஹல்க் ‘ பல்வேறு தரமான படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
கடைசியாக மார்வெல் நிறுவனம் தயாரித்த அவென்ஜர்ஸ் எண்ட் கேம் என்ற படம் உலகம் முழுவதும் பெரும் சாதனை படைத்தது வசூலை வாரி குவித்தது. இதைடுத்து தற்போது பிளாக் விடோ என்ற சூப்பர் ஹீரோ படத்தை தயாரித்து வருகின்றனர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்கார்லெட் ஜோஹன்சன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் விறு விறுப்பான ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வருகிற மே 1ம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் இப்படம் இந்தியாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.