ஆஸ்கர் விழாவிற்கு லேடீஸ் கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்.! கிண்டலடிக்கும் ரசிகர்கள்

திங்கள், 25 பிப்ரவரி 2019 (13:06 IST)
91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கி மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


 
உலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 
 
சிவப்பு கம்பள வரவேற்போடு உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல கலைஞர்கள் பங்குபெற்ற இந்த விழாவில் பல்வேறு நடிகர் நடிகைகளும் நவ நாகரீக ஆடையில் உலா வந்தனர். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் பாடகரும் நடிகருமான பில்லி போர்ட்டர் அணிந்து வந்த ஆடை அனைவரது கவனத்தையும் வேடிக்கையாக கவர்ந்தது. 


 
இந்த விழாவில் பெண்கள் அணியும் கருப்பு நிற கவுன் போன்ற ஆடையை அணிந்து வந்த நடிகர் பில்லியின் நடை பாவனையை பார்த்து அனைவரும் சிரித்தனர். ஆனால், நடிகர் பில்லி இந்த ஆடையில் மிகவும் வித்யாசமாக உணர்வதாகவும் , இந்த ஆடையை வித்யாசமாக வடிவமைத்து கொடுத்த ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி என்று கூறி ட்விட்டரில் பதிவிட்டுளளார்.  இவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். 


வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாதவிடாய் பற்றி பேசும் ’பீரியட்’ இந்திய குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!