Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்....!

பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்....!
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது.
பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகின்றன.  இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இவை கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத்தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
 
சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை  உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை.
 
பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. கழிப்பறை சிங்க் அடியில், கழிப்பறை மேஜை மீது  அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யப்படுவது  அவசியமாகும்.
 
பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை. இதனால் சானிட்டரி நாப்கின்  காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக  நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.
 
நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது, புதிய நாப்கினை பயன்படுத்துவதற்குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான  பழக்கம். உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும்  பரவச் செய்யும். 
 
உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் நாப்கினை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
 
ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, தவறான அணுகுமுறை. உடல் நலத்தைப் பணயம் வைத்துப்  பணத்தைச் சேமிப்பது நல்லது அல்ல.
 
நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். 
 
குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப் பெண்கள் சில தவறுகளை செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில் ஏற்படும்  இயற்கையான ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். 
 
உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளது.
 
பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை  வாங்குவதற்கு கற்று கொடுப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பக் காலத்தில் சாப்பிடவேண்டிய உணவு முறைகள் என்ன....?