சைவ உணவுகளில் பலராலும் பெரிதும் விரும்பப்படும் சுவையான சோயா வெஜ் கீமா எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: சோயா, பச்சை பட்டாணி, பட்டை, கிராம்பு, கசகசா இலை, ஏலக்காய், சீரகம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, வெண்ணெய், கொத்தமல்லி இலை, உப்பு தேவையான அளவு..
முதலில் அடுப்பில் கடாயை வைத்து தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் சோயாவை போட்டு வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு சோயாவை எடுத்து நீரை நன்றாக பிழிந்துவிட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியை அதேபோல கடாயில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கசகசா இலை, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், தக்காளியை போட்டு சுருள வதக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அனைத்து மசாலாக்களும் கலந்து நல்ல பதம் வந்த பின்பு வேகவைத்த பட்டாணி மற்றும் சோயாவை சேர்த்து மசாலா சேரும்படி கிளற வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு வெண்ணெய், கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்க வேண்டும். இப்போது சுவையான சோயா வெஜ் கீமா தயார். சோயா வெஜ் கீமாவை சாதத்தில் கலந்து சாப்பிடலாம் அல்லது சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடலாம்.