Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவையான கிராமத்து ஸ்டைல் தட்டு இட்லி செய்வது எப்படி?

Thattu Idly
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (15:48 IST)
இட்லி தமிழ் மக்களின் அன்றாட காலை உணவில் முக்கியமானது. ஆனால் அரிதாகவே பலருக்கும் தட்டு இட்லியை தெரியும். தட்டு இட்லி சாதாரண இட்லியை விட பெரிதாக இருக்கும். கமகமக்கும் சுவையான தட்டு இட்லியை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.


 
  • தேவையானவை: 2 கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் உளுந்து, சமையல் சோடா அரை ஸ்பூன், பழைய சாதம், உப்பு தேவையான அளவு.
  • முதலில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அவற்றை பழைய சாதத்துடன் கலந்து 4 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
  • பின்னர் ஊற வைத்த தண்ணீரை வடிக்காமல் அப்படியே அரைக்க வேண்டும்.
  • இட்லி சுடும் பதத்திற்கு மாவு அரைந்த பின் உப்பு சேர்த்து 10 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
  • இட்லி சுடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக மாவில் சமையல் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மாவை பெரிய தட்டுகளில் ஊற்றி இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்க வேண்டும்.
  • தட்டு இட்லிக்கு எண்ணெய் பொடி, சட்னி, சாம்பார் எல்லாம் சிறந்த சுவையை தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரையில் படுத்து தூங்குவது நல்லதா? கெட்டதா? – இதை படிச்சு தெரிஞ்சிக்கோங்க!