Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பூண்டு முறுக்கு செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 2 கப்
பூண்டு - 1 முழுவதும்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை: 
 
முதலில் பூண்டை விழுது போல் அரைத்து கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்து கொள்ளவும்.
 
வெண்ணெய் நன்கு மாவுடன் கலந்த பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். மாவுடன் தண்ணீர்,  சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
 
ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதே நேரத்தில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும். பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது எடுத்தால் சுவையான பூண்டு முறுக்கு  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments