தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடமை மாவு - 1/4 கப்
பாலக் கீரை - 3/4 கப் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை;
பாலக் கீரையில் இருக்கும் காம்பு பகுதியை அதாவது நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளாகாயை, தண்ணீர், பாலக் கீரையையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், ஓமம் சேர்த்து கலக்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும்.
முறுக்கு அச்சில் நட்சத்திரம் வடிவம் கொண்ட தகட்டை பொருத்தி மாவை அதில் நிரப்பவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் சின்ன சின்ன வட்டங்களாக முறுக்கைப் பிழியவும். எண்ணெய்யைச் சூடாக்கி பிழிந்து வைத்த முறுக்கை அதில் தட்டை கவிழ்த்துப்போடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து முறுக்கை வேகவைத்து திருப்பி விடவும். மேலும் தீயை குறைத்து சத்தம் முழுவதுமாக அடங்கும்வரை பொரித்து எடுக்கவும். சுவையான பாலக்கீரை முறுக்கு தயார்.