தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
எண்ணெய் - 2 டீஸ்பூன்
புளி தண்ணீர் - அரை கப்
மிளகாய் தூள் - 5 டீஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
வெந்தையத் தூள் - 1 டீஸ்பூன்
கள் உப்பு - 3 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
பூண்டு - 10
செய்முறை :
தக்களியை நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். அதோடு புளித் தண்ணீர் சேர்க்கவும். அடுத்ததாக மிளகாய்த் தூள், மஞ்சள், வெந்தையத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு எண்ணெய் பிரிந்து வருமாறு வதக்கவும். தாளிக்க மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி ஊறுகாயில் கொட்டவும். சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.