Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீரணத்திற்கு உதவும் சீரக துவையல் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள் :
 
சீரகம் - கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 15
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 7
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
 
சின்ன வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வதக்கவும். வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு  தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பாட்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். சூப்பரான சீரக துவையல் தயார்.
 
பயன்கள்: இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க் கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண  சக்தியைத் தூண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments