சென்னையில் சமையல் மாஸ்டர் மர்ம மரணம் – போலிஸார் குழப்பம் !

வியாழன், 12 டிசம்பர் 2019 (08:35 IST)
சென்னையில் உள்ள மதுபானக்கடை பாரில் சமையல் மாஸ்டராக வேலைப் பார்த்து வந்த பாபு என்ற சமையல் மாஸ்டர் மர்மமான முறையில் இறந்திருப்பது போலிஸாருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மண்ணடியில் உள்ள ஜாஃபர் சாரங்கன் தெருவில் அரசு ஒயின் ஷாப் செயல்பட்டு வருகிறது. அதையொட்டி உள்ள பாரில் பாபு என்பவர் சமையல் மாஸ்டராக செயல்பட்டு வருகிறார். பெரும் குடிகாரரான இவர்களில் பாரின் மொட்டை மாடியில் படுத்து உறங்குவதுதான் வழக்கம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினமும் வழக்கம்போல அவர் குடித்துவிட்டு உறங்குவதற்காக மேலே சென்றுள்ளார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவர் தவறி விழுந்தாரா அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டனரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இப்போது சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கமல், பிராவோ திடீர் சந்திப்பு பின்னணி என்ன ?