Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்து: மனநிலையை வர்ணங்கள் நிர்ணயிக்கும் என்பது உண்மையா...?

வாஸ்து: மனநிலையை வர்ணங்கள் நிர்ணயிக்கும் என்பது உண்மையா...?
நம் கண்கள் வர்ணங்களைப் பார்க்கும்பொழுது, நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தைப் பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன.
பூந்தோட்டங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற புத்துணர்வு என மனநிலையில் பல்வேறு வகை உணர்வுகள் தோன்றுகின்றன. 
 
இது போன்ற உணர்வுகள் நம் வீட்டிலும் நமக்கு ஏற்படுகின்றது. நம் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு உணர்வு நிலை உள்ளது. அதைச் சரியாக வெளிப்படுத்துவதும், தவறாக வெளிப்படுத்துவதும் நாம் வீட்டிற்கு பூசும் வர்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன.
webdunia
பொதுவாக நாம் எல்லா அறைகளுக்கும் ஒரே நிறத்தைத் தேர்வு செய்து பூசுவது. உண்டு. அப்படிச் செய்யும்பொழுது ஒரே மாதிரியான மனநிலை நமக்கு ஏற்படும். ஆனால் நாம் வேலை செய்யும் பொழுது இருக்கும் மனநிலை உறங்கும் போதோ, சமைக்கும் போது இருக்கும்  மனநிலை, படிக்கும் போதோ இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி இப்பிரச்சனைகளை சரி செய்வதே குறிப்பிட்ட அறைகளில் நாம் பூசும் நிறங்கள்தான்.
 
எந்தெந்த அறைக்கு எந்தெந்த நிறங்கள் பூச வேண்டும் என்று பார்க்கும் பொழுது, கட்டிடத்தின் வெளிப்பகுதிக்கு வெள்ளை அல்லது வெளிர்  மஞ்சளே சிறந்தது. கட்டிடத்தின் உள்ளே வரவேற்பறைக்கு ஆபிஸ் வொயிட் எனக் கூறப்படும் வெள்ளை நிறமும், படுக்கை அறையின் உள்  சுவற்றிற்கு வெளிர் ஊதா நிறமும், சமையலறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஆரஞ்சு நிறமும், படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு வெளிர்  பச்சை நிறமும், சிறப்பானவையாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரபத்மனின் வரலாறும் அழிக்க தோன்றிய ஆறுமுகனும்...!