Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல பிரச்சனைகளுக்கு தீர்வு வீட்டின் அறையை அமைப்பதை பொறுத்து உள்ளதா...?

பல பிரச்சனைகளுக்கு தீர்வு வீட்டின் அறையை அமைப்பதை பொறுத்து உள்ளதா...?
வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.

வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
 
வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
 
மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூசக்கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
 
தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும். பூஜை பொருட்களை அல்லது கடவுள்  படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது மனஅழுத்தத்தை தரும்.
 
வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக்கூடாது. அது நம் பணவிரயத்துக்கு தடைபோடும். போன்சாய் மரங்களை  வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடைபோடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் உள்ள எட்டு லிங்கங்கள் !!