Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்த அறை எங்கு அமைக்கவேண்டும் தெரியுமா...?

Advertiesment
வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்த அறை எங்கு அமைக்கவேண்டும் தெரியுமா...?
வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6 வது பாகங்களில் தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.

வீட்டின் தென் மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கலாம். வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.
 
வீட்டின் தென்கிழக்கில்தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டின் கிழக்கில்தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.
 
வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும்போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். வீட்டின் வடமேற்கில்தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.
 
வீட்டின் வடக்கில்தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல்வேண்டும். வீட்டின் வடகிழக்கு திசையில்தான் இறை வழிபாடு / தியானம் செய்தல் உயர்வானது.
 
வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும். வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிகமிக உயர்வானது. எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது. 
 
தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும் விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.
 
தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளி படிமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடல் நல்லது. வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வளர்பிறை அஷ்டமியில் எவ்வாறு வழிபாடுகளை செய்யவேண்டும் தெரியுமா...?