Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகிழக்கு பகுதியில் பூஜை அறையை அமைப்பது நல்லதா...?

வடகிழக்கு பகுதியில் பூஜை அறையை அமைப்பது நல்லதா...?
வீட்டில் உள்ள எட்டு திசைகளும் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்குத் திசை இது முக்கியத்துவம் வாய்ந்தது. 


வடகிழக்கு பகுதி எம்பெருமான் ஈசன் வசிக்கும் இடமாகும். எனவே இந்த பகுதி ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்த வடகிழக்கு பகுதியில் அமையும் அறையை மிகவும்  தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
 
பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம் வடகிழக்கு பகுதியாகும். இந்த அறையில் காற்றோட்டம் இருக்கிற வகையிலும், நன்றாக சூரிய ஒளி  வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வம் மிகவும் அதிகரிக்க்கும்.
 
மற்ற பகுதியில் உள்ள தரை தளத்தை விட இந்த ஈசான்ய மூலையில் உள்ள தரை தளம் சற்று பள்ளமாகவே இருக்க வேண்டும். இந்த ஈசான்ய மூலை அறையில் கண்டிப்பாக சமையல் அறை அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் தீய பலன்கள் விளையும்.
 
வடகிழக்கு அறையில் தெற்கு,தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்து கொள்ள வேண்டும்,இளம்வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுருசுருப்பனவர்களாகவும்,ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
 
வடகிழக்கு மூலையில் வரக்கூடாதவை: குடும்ப தலைவன், தலைவி படுத்து உறங்கும் அறை, குளியலறை, சமையல் அறை, பொருட்கள் சேமிக்கும் அறை, உட்புற மூலை படிக்கட்டு, வெளிப்புற மூலை படிக்கட்டு, கழிவுநீர் தொட்டி, மேல்நிலை தண்ணீர் தொட்டி, மரங்கள், இன்வேர்ட்டர் யுபிஸ் மற்றும் மின்சார பாக்ஸ்,  ஜெனரேட்டர் போர்டிகோ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு !!